மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
ஆழ்வார்குறிச்சி:கடையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடந்தது.நிலத்தடி நீரை பாதுகாக்கவும், வீட்டிற்கு இரண்டு மரம் வளர்க்கவும், தாமிரபரணி ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்கவும், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்குவதை தடுத்திடவும் புதிய தமிழகம் மற்றும் பிறந்த மண் அறக்கட்டளை சார்பில் கடையத்தில் சைக்கிள் பேரணி நடந்தது.பேரணிக்கு கடையம் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.முருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஒன்றிய தலைவர் செந்தில்வேல், இளைஞரணி செயலாளர் விஜயகுமார், இளைஞரணி துணை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். விவசாய அணி செயலாளர் மினிஸ்டர் வரவேற்றார்.மாவட்ட பேச்சாளர் ஜெயராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்த்ராஜா, இணை செயலாளர் சுரேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் சதீஷ், கிளை தலைவர் அந்தோணிராஜ் உட்பட பாப்பான்குளம், கடையம், கல்யாணிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிளை கழகத்தினர் கலந்து கொண்டனர். கடையம் ஒன்றிய தலைவர் செந்தில்வேல் நன்றி கூறினார்.பேரணி கடையம் யூனியன் அலுவலகம் முன் துவங்கி முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி வழியாக ஆம்பூரில் நிறைவு பெற்றது. பேரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
29-Sep-2025
25-Sep-2025