உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை மண்டல சி.எஸ்.ஐ.உறுப்பினர் தேர்தல்

நெல்லை மண்டல சி.எஸ்.ஐ.உறுப்பினர் தேர்தல்

தென்காசி:சி.எஸ்.ஐ.நெல்லை திருமண்டல உறுப்பினராக செங்கோட்டையை சேர்ந்த ஜார்ஜ் கிறிஸ்டோபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சி.எஸ்.ஐ.நெல்லை திருமண்டல பெருமன்ற உறுப்பினர் தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான தேர்தல் செங்கோட்டை சி.எஸ்.ஐ. சர்ச்சில் நடந்தது. தேர்தலை செங்கோட்டை சேகரகுரு சாமுவேல் மதுரம் சத்தியமா நடத்தினார். தேர்தலில் போட்டியிட்ட செங்கோட்டையை சேர்ந்த ஜார்ஜ் கிறிஸ்டோபர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இவர் பண்பொழியில் இந்தியன் பாங்கில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். சி.எஸ்.ஐ.சர்ச் தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்ஜ் கிறிஸ்டோபருக்கு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் மற்றும் மத போதகர்கள், கிறிஸ்தவ பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ