உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கடையநல்லூரில்குண்டாசில் இருவர் கைது

கடையநல்லூரில்குண்டாசில் இருவர் கைது

கடையநல்லூர்:கடையநல்லூரில் கூலிப்படை தலைவன் உட்பட 2 பேர் குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.புளியங்குடி டி.என்.புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி மகன் கருப்பசாமி (27). இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. தச்சநல்லூர் முருகானந்தம் மகன் கண்ணன் (எ) கண்ணபிரான் (33) பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது. கண்ணன் கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.கண்ணன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கடையநல்லூர் பஸ் ஸ்டாண்டில் கண்ணன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும் மாவட்ட எஸ்பி விஜயேந்திரபிதரி பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் உத்தரவின்படி குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை