மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
பணகுடி:பணகுடியில் பிறந்து 3 நாட்கள் ஆன நிலையில் இருந்த பச்சிளம் பெண் குழந்தை முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பணகுடியில் ஏராளமான முட்புதர்கள் உண்டு. சம்பவத்தன்று முட்புதர்கள் அடங்கிய பணகுடி அரசு மேல்நிலைப்பள்ளி ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு திகிலடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை மீட்டனர். அக்குழந்தையின் தாய், தந்தை யார் என்பது விசாரணையில் இன்னும் தெரியவில்லை. பிறந்து 3 நாட்களுக்குள் பெண் குழந்தை முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பணகுடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தொட்டில் குழந்தை திட்டம் தற்போது அமலில் இல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம் நடைமுறையில் இருந்தது. இத்திட்டத்தை வரும் காலங்களில் முறையாக செயல்படும் பட்சத்தில் இதுபோன்று பெண் குழந்தையை முட்புதரில் அனாதையாக வீசும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட பெண் குழந்தையை நெல்லை சமூக சேவை சங்க தத்துமைய ஒருங்கிணைப்பாளர் மங்களகுமாரிடம் பணகுடி போலீசார் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குபதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025