உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சப்-இன்ஸ்பெக்டர் மகளிடம் வரதட்சணைகொடுமை ;கணவர் உட்பட 3பேர் கைது

சப்-இன்ஸ்பெக்டர் மகளிடம் வரதட்சணைகொடுமை ;கணவர் உட்பட 3பேர் கைது

அம்பாசமுத்திரம்:அம்பை அருகே வரதட்சணை கேட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகளை துன்புறுத்தியதாக கணவர் உட்பட 3பேரை அம்பை மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.கல்லிடைக்குறிச்சி, வாணியர் தெருவை சேர்ந்தவர் சண்முக சுந்தர பெருமாள், அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ராஜலட்சுமிக்கும்(25), பாளை., என்ஜிஓ 'ஏ'காலனியை சேர்ந்த மந்திரம் மகன் முருகேசனுக்கும்(30) கடந்த 2009 ஜூலை 9ம்தேதி திருமணம் நடந்தது.அப்போது 48 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கம், 2லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டது.ராஜலட்சுமியிடம் மீண்டும் வரதட்சணை கேட்டு கணவர் முருகேசன், மாமனார் மந்திரம், மாமியார் சுந்தரி, தங்கை அனுப்பிரியா, அவரது கணவர் ஆறுமுக நயினார் துன்புறுத்தினர்.இதனால் ராஜலட்சுமி, கல்லிடைக்குறிச்சியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றார். நேற்று ராஜலட்சுமி அம்பை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கணவர் உட்பட 5பேர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் பிரவீணா வழக்கு பதிவு செய்து முருகேசன், மந்திரம், சுந்தரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அனுப்பிரியா, ஆறுமுக நயினாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை