உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடுமைதானத்தை பார்வையிட்டு வைகோ ஆலோசனை!

நெல்லையில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடுமைதானத்தை பார்வையிட்டு வைகோ ஆலோசனை!

திருநெல்வேலி:நெல்லையில் மதிமுக தென்மண்டல மாநாடு நடைபெறவுள்ள பொருட்காட்சி திடலை பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.நெல்லையில் செப்.15ம் தேதி மதிமுக தென்மண்டல மாநாடு நடக்கிறது. இதற்கான பணிகளில் மதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். மாநாடு பந்தல் அமைப்பு, மேடை அமைத்தல், தொண்டர்கள் அமரும் பகுதி, வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து நெல்லை டவுன் பொருட்காட்சி மைதானத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று பார்வையிட்டார். அதன்பின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதில் மாவட்ட செயலாளர்கள் பெருமாள், சரவணன், மாநில அமைப்புச் செயலாளர் நிஜாம், வக்கீல்கள் சுப்புரத்தினம், அமல்ராஜ், துணைச் செயலாளர் மின்னல் முகம்மதுஅலி, இளைஞர் அணி ராஜேந்திரன், விவசாய அணி செயலாளர் கல்லத்தியான், அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினர் திவான், பாலு, ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பந்தல் மற்றும் மேடை அமைப்பாளர் சிவாவுடன், பணிகள் குறித்து வைகோ ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை