மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
ஆழ்வார்குறிச்சி:கடையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.கடையம் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்கம், ஆய்க்குடி அமர்சேவா சங்கம் இணைந்து மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தியது. உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜான்பிரிட்டோ தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முகாமில் 48 பேர் கலந்து கொண்டனர். 30 பேருக்கு அடையாள அட்டை, 12 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.டாக்டர்கள் மாரிமுத்து, இளையராஜா, பேச்சு பயிற்சியாளர்கள் ராமலெட்சுமி, காஞ்சனா கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ராஜா மனோகர்சிங், அலிஸ்டெல்லா, மெர்லின், முருகலெட்சுமி, அருள்ஞானஜோதி, பிரவீனா, ஜெயஜோதி, முத்துலெட்சுமி, சிவவீரவநங்கை, இயன்முறை மருத்துவர்கள் அலங்கார செல்வி, திவ்யாராணி மற்றும் அமர்சேவா சங்க அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு செய்திருந்தனர்.
29-Sep-2025
25-Sep-2025