உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கடையத்தில்விழிப்புணர்வு பேரணி

கடையத்தில்விழிப்புணர்வு பேரணி

ஆழ்வார்குறிச்சி:கடையத்தில் மாற்றுத்திறன் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை கடையம் எஸ்.டி.சி.கிளை தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை எபனேசர் தலைமையில் சிறப்பு கல்வியாளர் ராஜாமனோகர்சிங் முன்னிலையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பேரணி பள்ளியில் துவங்கி பாரதியார் நூலகம், சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி, சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் வழியாக பள்ளியை வந்தடைந்தது.பேரணியை சிறப்பு ஆசிரியர்கள் அலீஸ் ஸ்டெல்லா, மெர்லின், முருகலெட்சுமி, இயன்முறை மருத்துவர் அலங்காரசெல்வி, அனைவருக்கும் கல்வி இயக்க கணினி விபர பதிவாளர் கணேசன், கணக்காளர் கனகராஜ் மற்றும் பள்ளி ஆசிரியைகள் வழிநடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை