உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வெய்க்காலிபட்டியில் பார்த்தீனியம்விஷ செடி ஒழிப்பு முகாம்

வெய்க்காலிபட்டியில் பார்த்தீனியம்விஷ செடி ஒழிப்பு முகாம்

ஆழ்வார்குறிச்சி:கடையம் வட்டாரம் வெய்க்காலிபட்டியில் பார்த்தீனியம் விஷ செடி ஒழிப்பு முகாம் நடந்தது.முகாமிற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தேவசகாயம் தலைமை வகித்து பேசியதாவது:''பார்த்தீனியம் செடி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விதைகளை உருவாக்கும். இவ்விதைகள் சுமார் 30 ஆண்டு வரை முளைப்புதிறன் உள்ளது. இதனால் இச்செடி மழைக்காலங்களில் பல்கி பெருகி பயிர்களுக்கு களை செடியாகவும், மனிதர்களுக்கு தோல்நோய், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற வியாதிகளை ஏற்படுத்தும். கால்நடைகளுக்கு தோல் நோய் மற்றும் நஞ்சாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே பார்த்தீனியம் செடியினை முற்றிலுமாக அழிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சாதாரண உப்பு 15 முதல் 20 கிலோவை 100 லிட்டர் நீரில் ஒட்டும் திரவம் 100 மிலி சேர்த்து அரை ஏக்கரிலுள்ள பார்த்தீனியம் செடிகள் மீது தெளித்து கட்டுப்படுத்தலாம். பயிரில்லாத தரிசு நிலங்களில் பார்த்தீனிய செடிகள் ஒழிக்க 2 கிலோ 2,4டி, சோடியம் உப்பினை 200 லிட்டர் நீரில் 200 மிலி ஒட்டும் திரவம் கலந்து ஒரு ஏக்கரிலுள்ள பார்த்தீனிய செடிகள் மீது தெளித்து அழிக்க வேண்டும்.நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வரும் செப்.16ம் தேதி வரை பார்த்தீனியம் ஒழிக்கும் முகாம் நடந்து வருகிறது. விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்'' என கேட்டுக் கொண்டார்.முகாமில் வேளாண்மை துணை இயக்குனர் (உ.ப.நி) அழகிரிசாமி, வேளாண்மை துணை இயக்குனர் (மா.நீ.ப.மேலாண்மை முகமை) சுப்பையா, கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர், வேளாண்மை அலுவலர் சுபசெல்வி, மாரியப்பன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை