மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
தென்காசி:தென்காசியில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை அக்கட்சியினர் கொண்டாடினர்.தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை அக்கட்சியினர் நேற்று கொண்டாடினர். தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் தே.மு.தி.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் கோயிலுக்கு முன் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகரின் முக்கிய இடங்களில் பட்டாசு வெடித்து, கட்சி கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிகளுக்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் தலைமை வகித்து குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கினார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளரும் தென்காசி ஒன்றிய பொறுப்பாளருமான காமராஜ், நகர செயலாளர் முத்துமாரியப்பன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஒன்றிய செயலாளர் லட்சுமணன், நகர அவைத் தலைவர் சுடலைமணி, மாவட்ட பிரதிநிதிகள் ராதாகிருஷ்ணன், திருமலைக்குமார், முருகன், சிவராமன், நகர இணை செயலாளர் சேதுராம பாண்டியன், நகர கேப்டன் மன்ற செயலாளர் முருகன், வர்த்தக அணி இசக்கிராஜ், இளைஞரணி வெங்கட்ராமன், வார்டு நிர்வாகிகள் முகமது முஸ்தபா, சித்தார்த்தன், மகபூப்கான், மாலைமுத்து கிருஷ்ணன், கார்த்திகேயன், முத்துகிருஷ்ணன், முகைதீன்பிச்சை, கிருஷ்ணன், சங்கரநாராயணன், லட்சுமணன், மீனாட்சி சுந்தரம், குற்றாலம் ஜடாமணி, இலஞ்சி குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
29-Sep-2025
25-Sep-2025