உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குறும்பலாப்பேரியில்வேட்பாளர் அறிமுக கூட்டம்

குறும்பலாப்பேரியில்வேட்பாளர் அறிமுக கூட்டம்

பாவூர்சத்திரம்:குறும்பலாப்பேரியில் நெல்லை திருமண்டலம் மேற்கு சபை மன்றம் செயற்குழு வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வக்கீல் நெல்சன் தலைமை வகித்தார். அம்பை சேகரகுரு சாமுவேல் ஜெபத்துடன் கூட்டம் துவங்கியது. சிவலசமுத்திரம் கோடீஸ்வரன் வரவேற்றார். கோவிலூற்று சேகரகுரு ஜான்கென்னடி வேதபாடம் வாசித்தார். வி.கே.புரம் சேகரகுரு அருள்ராஜ் பிச்சமுத்து தேவசெய்தி வழங்கினார். பார்வதியாபுரம் சேகரகுரு சுவாமிதாஸ், ஊத்துமலை டேவிட் பாக்கியராஜ் பேசினர்.கூட்டத்தில் ஆலங்குளம், அம்பை, கல்லிடைகுறிச்சி, கருத்தபிள்ளையூர், மாஞ்சோலை, மேலசிவந்திபுரம், நல்லூர், பாவூர்சத்திரம், புலவனூர், சிவலசமுத்திரம், திப்-மீனாட்சிபுரம், வி.கே.புரம் சேகரத்தினர், பெருமன்ற உறுப்பினர், சபை மன்ற உறுப்பினர், செயலாளர், பொருளாளர் மற்றும் சபை மன்ற ஆசிரிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வரும் 30ம் தேதி நடக்கும் மூன்றாம் கட்ட தேர்தலில் மேற்கு சபை மன்றம் சார்பாக செயற்குழுவுக்கு போட்டியிடும் மனுவேல் செல்வநாயகம், லீலா பொன்மணி, ஆவின்பாலன், ஆல்பர்ட் கிருபாகரன், மேற்கு சபை மன்ற செயலாளராக போட்டியிடும் ஜான்கிறிஸ்டோபர் ஆகியோரை லே செயலர் வேட்பாளர் குணசிங் செல்லத்துரை அறிமுகம் செய்து பேசினார். புலவனூர் சேகரகுரு காந்தையா நல்லபாண்டி நிறைவு ஜெபம் செய்தார்.பாவூர்சத்திரம் பெருமன்ற உறுப்பினர் மனுவேல் செல்வநாயகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ