மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
குற்றாலம்:குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் 'வேதி விழா-2011' நடந்தது.குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் 'வேதி விழா-2011' கொண்டாடப்பட்டது. மருத்துவ துறையில் மனித நலத்திற்கு பயன்படும் வேதிப்பொருட்கள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது. பசுமை சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் மாதிரிகள் தயாரித்தல், பிளாஸ்டிக் ஒரு வரமா? சாபமா? என்ற தலைப்பில் விளக்க படங்கள் தயாரித்தலும், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ற தலைப்பில் கோலப் போட்டியும் நடந்தது.போட்டியில் திரளான மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேதியியல் துறை பேராசிரியைகள் பாலா, தனம், ஹேமலதா, ஹேமா கல்யாணி, சண்முகவடிவு, வளர்மதி, அன்னபூரணி, உலகம்மாள், முத்துலட்சுமி மற்றும் பாண்டியன் செய்திருந்தனர்.
29-Sep-2025
25-Sep-2025