உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சிவந்திபுரத்தில் சமக.,நிர்வாகிகள் கூட்டம்

சிவந்திபுரத்தில் சமக.,நிர்வாகிகள் கூட்டம்

விக்கிரமசிங்கபுரம்:சிவந்திபுரத்தில் சமக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் சமக ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் அம்பை ஒன்றிய செயலாளர் கணிகை அழகிரி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாசிங், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் சுந்தர், மாணவரணி செயலாளர் மாயிகண்ணன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர் லாரன்ஸ், மாவட்ட துணை செயலாளர் செங்குளம் கணேசன், மாணவரணி செயலாளர் சாமுவேல்ராஜன் பேசினர். நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவந்திபுரம் ராஜா தலைமையில் 15 பேர் மதிமுகவில் இருந்து விலகி சமக கட்சியில் இணைந்தனர்.ஒன்றிய துணை செயலாளர் குட்டி தங்கராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ