உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்ப மனு தாக்கல்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்ப மனு தாக்கல்

தென்காசி:தென்காசியில் நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர்.தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனு பெறுவது 2ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடக்கும் என அக்கட்சியின் பொது செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் தென்காசி மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.மாவட்ட செயலாளரும் கதர் கிராம தொழில் துறை அமைச்சருமான செந்தூர்பாண்டியன், அ.தி.மு.க.விவசாய அணி மாநில இணை செயலாளர் திருச்செங்கோடு கமலநாதன் விருப்ப மனுக்களை பெற்றனர்.நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 10 ஆயிரம் ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 2 ஆயிரம் ரூபாயும், டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 2 ஆயிரத்து 500 ரூபாயும், டவுன் பஞ்., கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 500 ரூபாயும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 5 ஆயிரம் ரூபாயும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 2 ஆயிரம் ரூபாயும் செலுத்தி விருப்ப மனு தாக்கல் செய்தனர். இரவு 7 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.விருப்ப மனுக்கள் பெற்ற போது மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செந்தூர்பாண்டியன் பேசும் போது, ''தி.மு.க.வை இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம். இதற்காக தீவிரமாக பணியாற்றுகிறோம்'' என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட இலக்கிய அணி ஆர்.எஸ்.கே.துரை, மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன், குற்றாலம் செயலாளர் குமார் பாண்டியன், தொகுதி செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், பொய்கை மாரியப்பன், இணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நடராஜன், முருகையா, நகர செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், செல்லப்பன், வசந்தம் முத்துப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷமீம், இலஞ்சி செயலாளர் காத்தவராயன், நகர ஜெ.,பேரவை செயலாளர் முருகன்ராஜ், துப்பாக்கி பாண்டியன், கூட்டுறவு மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து வரும் 8ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை