உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குற்றாலம் சீசன் நிலவரம்

குற்றாலம் சீசன் நிலவரம்

குற்றாலம்:தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது.கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி போன்ற அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேகமூட்டத்துடன் சாரல் மழை குளிர்ந்த காற்றுடன்தூரிக் கொண்டே இருந்தது.நேற்றும் சாரல் மழை தொடர்ந்தது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை லேசாக வெயில் எட்டி பார்த்த போதும் மழை மேகங்களும், தென்றல் காற்றும் சேர்ந்து வெயிலை விரட்டி அடித்தது. ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தியன்று பள்ளி, கல்லூரி விடுமுறை தினங்கள் என்பதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.குற்றாலம் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி