உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தென்காசி மாவட்ட கவுன்சிருக்கு அதிமுக வேட்பாளர் வேட்பு மனு

தென்காசி மாவட்ட கவுன்சிருக்கு அதிமுக வேட்பாளர் வேட்பு மனு

தென்காசி : தென்காசி யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்காசி யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக வல்லத்தை சேர்ந்த ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று தென்காசி யூனியன் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தென்காசி ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் சங்கரபாண்டியன், முன்னாள் யூனியன் தலைவர் குத்தாலிங்கம் உடனிருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் முடிந்ததும், வேட்பாளர் ராமச்சந்திரன் கூறும் போது, ''மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளராக என்னை அறிவித்த கட்சியின் பொது செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களும் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு கிடைத்திட பாடுபடுவேன். முன்னோடி மாவட்ட பஞ்.,வார்டாக தென்காசி யூனியன் பகுதியை மாற்றிக் காட்டுவேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை