மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
தென்காசி : தென்காசி யூனியன் தேர்தலில் நேற்று 86 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தென்காசி யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர் இசக்கிபாண்டியன், அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன், செய்யது மசூது, சுபாஷ்சாந்தன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 1வது வார்டுக்கு வெயிலாச்சி, 2வது வார்டுக்கு சீனிவாசன், 3வது வார்டுக்கு மாணிக்கம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 6வது வார்டுக்கு வேலு, 7வது வார்டுக்கு முத்துப்பாண்டியன், ஆறுமுகம், காவையா, 9வது வார்டுக்கு கலைச்செல்வி, சுப்பிரமணியன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பஞ்.,தலைவர் பதவிக்கு பெரியபிள்ளைவலசைக்கு தேவிகா, பாப்பா, சுமைதீர்ந்தபுரத்திற்கு பழனிசெல்வி, காசிமேஜர்புரத்திற்கு இசக்கிமுத்து, முருகன், மற்றொரு இசக்கிமுத்து, கணேசன், பிரானூருக்கு பட்டுராஜ், சந்திரலேகா, ஆயிரப்பேரிக்கு கணபதி, மத்தளம்பாறைக்கு கருப்பசாமி, திருச்சிற்றம்பலத்திற்கு தமிழ்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 14 பஞ்.,களில் உள்ள 117 பஞ்.,வார்டு கவுன்சிலர் பதவிக்கு 61 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆக மொத்தம் நேற்று மட்டும் யூனியன் தேர்தலில் 86 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
* கீழப்பாவூர் யூனியன்
கீழப்பாவூர் யூனியனில் உள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இதுவரை ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் யூனியன் பகுதியில் உள்ள 21 பஞ்.,களின் தலைவர் பதவிக்கு 51 பேரும், 19 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 16 பேரும், 213 பஞ்.,வார்டு கவுன்சிலர் பதவிக்கு 338 பேரும் நேற்று வரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
29-Sep-2025
25-Sep-2025