உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குற்றாலம் ஆசிரமத்தில் சிறுவன் மாயம்

குற்றாலம் ஆசிரமத்தில் சிறுவன் மாயம்

குற்றாலம் : குற்றாலம் ஆசிரமத்தில் மாயமான சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.ஆண்டிப்பட்டி தாலுகா ஒத்தகோவில் சித்தயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரத்தினவேல் கவுண்டர். இவரது மகன் தினேஷ்குமார் (13). இவரது தாயார் இறந்து விட்டதால் இவர் அவரது பாட்டி வீரம்மாள் வீட்டில் வளர்ந்து வந்தார். வீரம்மாள் தனது பேரன் தினேஷ்குமாரை குற்றாலம் ஐந்தருவியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் கடந்த மாதம் 27ம் தேதி சேர்த்தார். இந்நிலையில் தினேஷ்குமாரை கடந்த 1ம் தேதியிலிருந்து காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுபற்றி குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவன் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விசாரணை நடத்தி சிறுவன் தினேஷ்குமாரை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை