மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
நெல்லை மாவட்ட புறநகர் பகுதியில் பெரும்பான்மையான இடங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியலை பார்த்து அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமிழந்து காணப்படுகிறன்னர்.சட்டசபை தேர்தலில் பெற்ற இமாலய வெற்றியை உள்ளாட்சி தேர்தலிலும் பெற வேண்டும் என்ற முனைப்பில் அ.தி.மு.க.தலைமை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே அனைத்து அரசியல் கட்சிகளையும் ஓரம் கட்டி விட்டு வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க.பொது செயலாளரும் அக்கட்சியின் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். இந்த வேட்பாளர் பட்டியலை பார்த்து அக்கட்சியினர் மட்டும் அல்ல அக்கட்சியுடன் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்திருந்த கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர்.தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு வேட்பாளர் பட்டியல் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.வினரிடமும், கூட்டணி வைத்திருந்த கட்சியினரிடமும் இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது என்பது நெல்லை புறநகர் மாவட்டத்தில் பல இடங்களில் காணமுடிகிறது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தலைமை கூட்டணியை விரும்பாமல் தனித்து நின்று வெற்றி கனியை சுவைத்திட முனைப்பு காட்டி வருவதால் அக்கட்சியின் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., கம்யூ.,கள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் விலகி விட்டன.தென் மாவட்டங்களில் ஓரளவிற்கு செல்வாக்கு உள்ள ச.ம.க.வின் நிலை இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் அ.தி.மு.க.வேட்பாளர்களை பலரை மாற்ற வேண்டும் என கோரி அக்கட்சியினர் கட்சியின் தலைமைக்கு பேக்ஸ் மூலம் மனு அனுப்பி வருகின்றனர். இது எந்தளவிற்கு பயன்தரும் என்பது தெரியவில்லை. வரும் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என்பதால் அதற்கு முன்னதாக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் வரும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருக்கின்றனர்.அ.தி.மு.க.வேட்பாளர்கள் நேற்று அதிகளவில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தங்களுக்கு விருப்பமில்லாத வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வேட்பு மனு தாக்கலின் போது பெரும்பான்மையான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்ததை காண முடிந்தது. வேட்பு மனு தாக்கலின் போது கலந்து கொண்ட ஒரு சில நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமிழந்து காணப்பட்டனர்.நெல்லை புறநகர் வடக்கு மாவட்டத்தில் அதிக அளவில் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையான வேட்பாளர்களை மாற்ற கோரி இம்மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான மனுக்கள் கட்சியின் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை கட்சி தலைமை உணர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியினர் விரும்புகின்றனர்.
நமது சிறப்பு நிருபர்
29-Sep-2025
25-Sep-2025