மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
செங்கோட்டை : 'செங்கோட்டை நகராட்சியை தமிழகத்தின் மாடல் நகராட்சியாக உருவாக்கி தருவேன்' என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகளை அதிமுக வேட்பாளர் மோகனகிருஷ்ணன் அளித்துள்ளார்.செங்கோட்டை நகராட்சி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வக்கீல் மோகனகிருஷ்ணன் உள்ளாட்சி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் மேற்கொள்ளப்படும் பணிகளை வாக்குறுதிகளாக அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''செங்கோட்டை நகரில் முழு நேரமும் மக்கள் பணிபுரிவதுடன் எந்த நேரமும் நகராட்சி அலுவலகத்தில் சந்திக்கலாம். நகராட்சி பகுதியில் உள்ள 24 வார்டுகளுக்கும் தினமும் தாமிரபரணி குடிநீர் வழங்க ஆவண செய்யப்படும். தாமிரபரணி குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.அனுமதியில்லாத பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அமைந்த பகுதிகளில் உரிய அனுமதி பெற்று அனைத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். செங்கோட்டை வாரச்சந்தை முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு தினசரி மார்க்கெட் போல புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். செங்கோட்டையில் ஒருவழிப்பாதை முழுமையாக்கப்படும். செங்கோட்டை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் விரிவுப்படுத்த முயற்சி எடுக்கப்படும். செங்கோட்டை நகராட்சி பஸ்ஸ்டாண்டில் புதிதாக பயணிகள் தங்கும் விடுதி அமைக்கப்படும்.அனைத்து வார்டு பகுதிகளிலும் பொது குடிநீர் நல்லி அமைக்கப்படும். செங்கோட்டை மேலூர் வழியாக டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். செங்கோட்டை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான டவுன் ஹாலில் புதிய நவீன திருமண மண்டபம் அமைக்கப்படும். தாலுகா அலுவலகம் முன் முஸ்தபா பூங்கா பகுதி மேம்படுத்தி வணிக வளாகம் அமைக்க முயற்சி எடுக்கப்படும். கச்சேரி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஏற்பாடு செய்யப்படும். இளைஞர்கள் விளையாடுவதற்கு அனைத்து வசதிகள் கொண்ட விளையாட்டு பயிற்சி கூடம் அமைக்கப்படும்.செங்கோட்டை நகர மாணவ, மாணவிகளின் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும். செங்கோட்டை நகராட்சி பகுதியை தமிழகத்தில் மாடல் நகராட்சி கொண்டமையாக உருவாக்கிட அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்படும். நகராட்சி பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்வித்திறன் மேம்பட பயிற்சி முகாம்கள் இலவசமாக நடத்தப்படும். செங்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலைவாய்ப்புகள் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மனோ கல்லூரி செங்கோட்டை நகராட்சியில் அமைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
29-Sep-2025
25-Sep-2025