உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஏர்வாடியில் பஸ் கண்டக்டரிடம் டிக்கெட்டை பறித்து சென்றவர் கைது

ஏர்வாடியில் பஸ் கண்டக்டரிடம் டிக்கெட்டை பறித்து சென்றவர் கைது

ஏர்வாடி : ஏர்வாடியில் அரசு பஸ் கண்டக்டரிடம் இருந்து டிக்கெட்டை பிடுங்கி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு நேற்று முன்தினம் மாலையில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த அகிலன் என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக அதே மாவட்டத்தை சேர்ந்த சந்திரன்புதூரை சேர்ந்த முருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பஸ் ஏர்வாடி மெயின்ரோட்டில் வேகத்தடை மீது ஏறிச் சென்றபோது வேகமாக சென்றதை பஸ்சில் இருந்த பயணி கண்டித்துள்ளார்.இதனால் கண்டக்டர் மற்றும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஏர்வாடி பஸ்ஸ்டாப்பில் பஸ் நின்றபோது கண்டக்டரிடம் இருந்து அந்த பயணி டிக்கெட்டை பிடுங்கி கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து கண்டக்டர் முருகன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குபதிவு செய்து திருங்குறுங்குடி தென்கரையை சேர்ந்த தங்கையா மகன் முருகனை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி