உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையில் வாலிபர் கொலை கிராம மக்கள் போராட்டம்

நெல்லையில் வாலிபர் கொலை கிராம மக்கள் போராட்டம்

திருநெல்வேலி:திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே புளியங்குளம் கிராமத்தில் வசித்தவர் முத்து பெருமாள்,௨௫. பெட்ரோல் பங்க் ஊழியர். மேலும், சமூக வலைதளமான 'யு-டியூப்'பில் சேனல் நடத்தி வந்தார். கடந்த ௩௧ம் தேதி காலை பைக்கில் பாளையங்கோட்டை சென்றார்.ரெட்டியார்பட்டி மலை அருகே ஜான்சன் நகர், சாய்பாபா கோவில் அருகே, பின்தொடர்ந்து பைக்கில் வந்த சிலர், முத்து பெருமாளை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். உடலை வாங்க மறுத்து கருங்குளம் சுற்றுப்புற கிராம மக்கள் சாலை மறியல் நடத்தினர்.

௨ பேர் கைது

போலீசார் விசாரணை நடத்தி செய்துங்கநல்லூர் அருகே தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்,௨௩, இசக்கிப்பாண்டி,௨௪ ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை