உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கழுநீர்குளம் பெரியகுளத்தில் காற்றாலை மின் கம்பங்களை அகற்ற கோரிக்கை

கழுநீர்குளம் பெரியகுளத்தில் காற்றாலை மின் கம்பங்களை அகற்ற கோரிக்கை

வீரகேரளம்புதூர் : கழுநீர்குளம் பெரியகுளத்தை ஆக்ரமித்து நடப்பட்டுள்ள தனியார் காற்றாலை மின் கம்பங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கழுநீர்குளம் பெரியகுளத்தின் மேல்புறம் புதிய தனியார் காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பொருட்கள் கனரக வாகனங்களின் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் கழுநீர்குளம் கால்வாய் கரையில் அமைந்துள்ள ரோடு சேதமடைந்துள்ளதாகவும், இக்காற்றாலையிலிருந்து அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் பெரியகுளத்தை ஆக்ரமித்து நடப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டுமெனவும் கழுநீர்குளம் பஞ்., தலைவர் ராமாத்தாள் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதற்கான கோரிக்கை மனுவை எம்.பி.ராமசுப்புவுக்கு அனுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை