மேலும் செய்திகள்
கார் விபத்தில் அரசு டாக்டர் காயம்
10-Jan-2025
திருத்தணி, திருத்தணி தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், 62; இவர் நேற்று, சூரியநகரம் ஊராட்சியில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக, மனைவி சரஸ்வதி, 60, என்பவருடன், 'ஷிப்ட்' காரில் சென்றார். அங்கு மணமக்களை வாழ்த்திவிட்டு மீண்டும் காரில் திருத்தணி நோக்கி ஏகாம்பரம் என்பவர் காரை ஓட்டி வந்தார்.தெக்களூர் அருகே வந்தபோது, ஒரு வளைவில், கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமுள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், கணவர், மனைவிக்கும் காயம் ஏற்பட்டது. அவ்வழி யாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10-Jan-2025