உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூந்தமல்லியில் 2 பைக் மர்மமான முறையில் தீக்கிரை

பூந்தமல்லியில் 2 பைக் மர்மமான முறையில் தீக்கிரை

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை, தியாகி சொக்கலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர், செக்கலிங்கம். இவர்கள் தங்களது 'ஹோண்டா யூனிக்கான்' மற்றும் 'ராயல் என்பில்ட் தண்டர்பேர்ட்' பைக்குகளை, வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்தனர்.அப்பகுதியில் மின் கம்பம் உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இரண்டு பைக்குகளும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள், தண்ணீர் ஊற்றி தீ அணைத்தனர். அதற்குள் இரண்டு பைக்குகளும் எரிந்து நாசமாயின.மின் கம்பியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி