உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மொபைல் போன் டவரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

மொபைல் போன் டவரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

திருவள்ளூர்: கடம்பத்துார் அருகே மொபைல்போன் டவரில், பேட்டரி திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். கடம்பத்துார் அடுத்த புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கு சொந்தமான இடத்தில், 'இண்டஸ் டவர்' நிறுவனம் சார்பில், தனியார் மொபைல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவரில், டெக்னீஷியனாக, முத்துப்பாண்டி, 24 பணிபுரிந்து வருகிறார். கடந்த, 26ல் மொபைல்போன் டவரில் இருந்த, 24 பேட்டரிகள் திருடு போயின. இதுகுறித்து, முத்துப்பாண்டி, மேற்பார்வையாளரான சென்னையைச் சேர்ந்த லோகநாதன், 58, என்பவருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து, லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில், கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர்.இதில், மொபைல்போன் டவரில் இருந்த பேட்டரியை திருடியதாக, பள்ளிப்பட்டு, முத்துப்பாண்டி, 27, திருவள்ளூர் தினகரன், 30, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, 49,620 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை