உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீரகோவில் மோட்டூரில் பாழாகும் தகன மேடை

வீரகோவில் மோட்டூரில் பாழாகும் தகன மேடை

ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது வீர கோவில் மோட்டூர். இந்த கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மேற்கில் கிராம பொது குளம் உள்ளது. இந்த குளக்கரையில் காரியமேடை கட்டப்பட்டுள்ளது. இந்த குளக்கரையில் ஈமச்சடங்கு நடத்துபவர்கள் தகன மேடை கட்டடத்தில் உள்ள குளியலறையை பயன்படுத்தி வந்தனர். கடந்த நான்காண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. டைல்ஸ் பதித்த கற்களுடன் சீராக அமைக்கப்பட்ட இந்த கட்டடம் தற்போது பயன்பாட்டில் இல்லாததால், கட்டடத்தின் உட்பகுதியில் கொடிகள் படர்ந்து உள்ளன. இதனால் கட்டடம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொடிகளை அகற்றி இந்த தகனமேடை கட்டடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பகுதி வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !