உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எல்.பி.ஜி., சலவை பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்

எல்.பி.ஜி., சலவை பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்:சலவை தொழிலாளர்கள், எல்.பி.ஜி., எரிவாயு சலவை பெட்டி பெற, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சலவை தொழிலாளர்கள் பயன்படுத்தும், கரியால் இயங்கும் பித்தளை சலவை பெட்டிக்கு மாற்றாக, திரவ பெட்ரோலிய வாயு எல்.பி.ஜி., சலவை பெட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சலவை தொழிலாளர்கள், எல்.பி.ஜி., சலவை பெட்டி பெற, குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்குள் உள்ளோர், விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை