உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆர்.கே.பேட்டை அருகே இருதரப்பு மோதல்: 3 பேர் கைது

ஆர்.கே.பேட்டை அருகே இருதரப்பு மோதல்: 3 பேர் கைது

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் குப்பன்,40. இவரின் வீட்டின் அருகே ஒரு பெட்டிக்கடை உள்ளது. நேற்று முன்தினம் மாலை, செல்லத்தூர் காலனி பகுதி சேர்ந்த சந்துரு,19, சதீஷ், 26, ஆகிய இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் பெட்டிக்கடைக்கு வந்துள்ளனர். இரு சக்கர வாகனத்தை குப்பன் வீட்டிற்கு செல்லும் வழியில் நிறுத்தியதால், குப்பன் இருவரிடம், வாகனத்தை சற்று ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சந்துரு, சதீஷிக்கு ஆதரவாக சக்திவேல்,19, சரவணன்,22, சச்சின், 17, ஆகியோரும், குப்பனுக்கு ஆதரவாக, மகாலிங்கம், 29, லோகேஷ், 22, ஆகியோர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதில் நால்வர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், சந்துரு, தமிழ்செல்வன், லோகேஷ் ஆகிய மூவரை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை