மாணவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்த உளுந்தையைச் சேர்ந்தவர் பிரவீன், 20. கீழச்சேரியில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து கீழச்சேரி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கீழச்சேரியைச் சேர்ந்த ஆகாஷ், 19, மற்றும் மூன்று பேர் கும்பல், பிரவீனை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீன் கொடுத்த புகாரின்படி, ஆகாஷ் உட்பட நால்வர் மீது மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.