உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொலை மிரட்டல் ஏழு பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் ஏழு பேர் மீது வழக்கு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த விடையூர் அருகே உள்ள காரணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 52.இவரது மகன் அருண்குமார் என்பவர் இதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி ராஜேந்திரன் வீட்டிற்கு வெங்கடேசன் மனைவி வாசுமதி, 36 மகன் ஆதித்யா மற்றும் உறவினர்கள் 5 பேர் என, ஏழு பேர் வந்துள்ளனர். இவர்கள் ராஜேந்திரன் அவரது மனைவி பாத்திமா, மகன் அர்ச்சணா ஆகிய மூவரையும் ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நேற்று முன்தினம் பாத்திமா கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை