உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி முருகன் கோவிலில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு

திருத்தணி முருகன் கோவிலில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், பொன்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 45; இவர், திருத்தணி முருகன் கோவிலில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வருகிறார்.கடந்த 2020ம் ஆண்டு, நவம்பர் 27ம் தேதி, கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் உதவியாளர்களாக பணிபுரிந்த கார்த்திகேயன், ஜோதி சர்மிளா, அருணாச்சலம் ஆகியோரை சந்தித்து பதவி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை குறித்து பெருமாள் கேட்டுள்ளார்.அப்போது, ஆதிதிராவிடர் வகுப்பு சார்ந்தவர் என்பதால், தகுதி இருந்தும் பதவி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை மேற்கண்ட 3 ஊழியர்கள் தடுப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து, பெருமாள், மேற்கண்ட மூவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்கு பதிவு செய்யக்கோரி, திருத்தணி போலீஸ் நிலையம் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்திடம் பெருமாள் புகார் கொடுத்தார்.இதையடுத்து, தேசிய ஆணையத்தின் உத்தரவின்படி, ஹந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், திருத்தணி போலீசார், பெருமாள் அளித்த புகாரின்படி, கோவில் ஊழியர்கள் கார்த்திகேயன், ஜோதி சர்மிளா, அருணாச்சலம் ஆகிய மூன்று பேர் மீது, நேற்று, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெருமாள் அளித்த புகாரின் மீது, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவின்படி, சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ