மேலும் செய்திகள்
வள்ளிமலை பிரம்மோற்சவம்
07-Mar-2025
வள்ளிமலை, வள்ளியை முருக பெருமான் கவர்ந்த தலம், வேலுார் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலை. வள்ளிமலை மலைக்கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் அருள்பாலித்து வருகிறார். இதில், மலை மீது அமைந்துள்ளது குகைக்கோவில். இந்த கோவில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுவருகிறது. மாசி பிரம்மோத்சவம் வள்ளிமலையில் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் சிம்மம், தங்கமயில், நாக வாகனம், அன்னம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வரும் முருக பெருமான், நேற்று தேரில் பவனி வந்தார்.திரளான பக்தர்கள், 'அரோகரா... அரோகரா' என கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.வள்ளிமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு எழுந்தருளும் முருக பெருமான், கோட்டநத்தம், சின்னகீசகுப்பம், சோமநாதபுரம், பெருமாள் குப்பம் என, பல்வேறு கிராமங்களை கடந்து, நாளை மறுநாள் மாலை 5:00 மணிக்கு கோவில் நிலைக்குவந்தடைகிறார்.
07-Mar-2025