உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதல்வர் ஸ்டாலினுக்கு திருவள்ளூரில் வரவேற்பு

முதல்வர் ஸ்டாலினுக்கு திருவள்ளூரில் வரவேற்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கலைஞர் திடல், கே.பி.எஸ்., கிரிக்கெட் அகாடமி மைதானத்தில், தி.மு.க., சார்பில், மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, நிதிப்பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் பா.ஜ.க., அரசை கண்டித்து நேற்று மாலை கண்டன பொதுகூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து பேசினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூர் வந்தபோது, சிறுபான்மை நலன் துறை அமைச்சர் மு.நாசர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், திருத்தணி எம்.எல்.ஏ.,வுமான திருத்தணி எஸ்.சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினரும், திருவள்ளூர் எம்.எல்.ஏ.வுமான வி.ஜி. ராஜேந்திரன், கடம்பத்துார் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மோ. ரமேஷ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி சந்திரசேகரன்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வல்லுார் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி பா.செ. குணசேகர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான திருத்தணி எம்.பூபதி உள்பட கட்சியின் மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி