உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை பொருள் விற்பனை ஆய்வு நடத்த கலெக்டர் உத்தரவு

போதை பொருள் விற்பனை ஆய்வு நடத்த கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்:பள்ளி, கல்லுாரி அருகில் உள்ள கடைகளில் போதை பொருள் விற்பனை குறித்து, கூட்டாய்வு நடத்த காவல் துறைருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம்- ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர்கள் மகேஷ்வரன், அன்பு, டி.ஆர்.ஓ., ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், காவல் நிலையங்களில், 'போஸ்கோ' வழக்கு, குழந்தை திருமணம் குறித்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளி, கல்லாரி மாணவர்களிடையே போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும்; உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பு மற்றும் காவல் துறையினர் இணைந்து கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் தடுத்து நிறுத்தி, போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற, காவல் துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம்-திருவள்ளூர், தீபா- திருத்தணி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை