புகார் பெட்டி
நிரம்பி வழியும் குப்பை தொட்டிதிருவாலங்காடு ஊராட்சியில் இருந்து மணவூர் செல்லும் சாலையில் தீப்பாய்ந்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் எதிரே அப்பகுதியில் சேகரமாகும் குப்பை கொட்ட தொட்டி வைக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக குப்பைதொட்டியில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்துவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நிரம்பிவழியும் குப்பையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜி.ராஜேஷ், திருவாலங்காடு.திருவள்ளூர் நகரில்நாய் தொல்லைதிருவள்ளூர் நகராட்சி, 2வது வார்டு, நேதாஜி சாலை, ஜவஹர் நகர் பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, 10க்கும் மேற்பட்ட தெருக்களில் நாய் தொல்லை அதிகமாகி விட்டது. இருசக்கர வாகனத்தில் செல்வோரையும், பள்ளி செல்லும் மாணவ, மாணவியரையும் துரத்தி கடிப்பதால், சாலையில் நடமாடவே மக்கள் அச்சப்படுகின்றனர். இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், நாய்கள் துரத்துவதால் தடுமாறி கீழே விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, நகராட்சி அலுவலர்கள், உடனடியாக ஜவஹர் நகர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.-ஆர்.சிவபாலகுமரன், திருவள்ளூர்.புதரில் மறைந்த கழிவுநீர் கால்வாய்ஊத்துக்கோட்டை பேரூராட்சி, செட்டித் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற, கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் செட்டித் தெரும் செல்லும் வழியில், குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்திற்கு எதிரே உள்ள கால்வாய் முழுதும் செடிகள் சுழ்ந்து மறைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கால்வாய் தெரியாமல் அதில் விழுந்து விடுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு கால்வாயை மூடியுள்ள புதரை அகற்ற வேண்டும்.- -என்.உதயகுமார், ஊத்துக்கோட்டை.