| ADDED : செப் 14, 2024 08:35 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பில்லாக்குப்பம் கிராமத்தில் வசித்தவர் மணி மகன் அஜய், 22. வெல்டர். அவர் மீது சிப்காட் போலீசில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரு தினங்களுக்கு முன், அதே கிராமத்தில் ஒதுக்குபுறமான மைதானத்தில் உடல் முழுதும் வெட்டு காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.கொலை வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், கொலையில் ஈடுபட்ட அஜயின் நண்பர்களான பில்லாக்குப்பம் தனுஷ், 18, பொன்னேரி அடுத்த கோளூரை சேர்ந்த பசுபதி, 20 மற்றும் 17 வயது சிறுவர் இருவர் உட்பட் நான்கு பேரை கைது செய்தனர்.அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையயில் கூறியதாவது:தனஷ், அஜய் ஒன்றாக மது அருந்தும் போது, அஜய், தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ளவதற்காக, தனுஷை மட்டம் தட்டி பேசுவது, கத்தி காண்பித்து மிரட்டும் தோரணையில் அடித்து பேசுதை வழக்கமாக கொண்டிருந்தார். பொறுமை இழந்த தனுஷ், அவரது நண்பரான பசுபதியுடன் சேர்ந்து அஜயை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.சம்பவம் நடந்த இடத்தில் ஏற்கனவே கத்தியை மறைத்து வைத்து, அஜயை மது அருந்த அழைத்தனர். அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்து போதை ஏற்றியபின், கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் அஜய்யின் பின் தலையில், பசுபதி குத்தியுள்ளார். பின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நான்கு பேரும் அஜயை சரமாரியாக குத்தி கொலை செய்தோம்.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் தனுஷ், பசுபதியை ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். மற்ற இரு சிறுவர்களை, திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சென்னை, கெல்லீஸ் சிறுவர் சீர் திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.