உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமடைந்த ஜாகீர்மங்கலம் சாலை

சேதமடைந்த ஜாகீர்மங்கலம் சாலை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது ஜாகீர்மங்கலம் கிராமம். இங்கு, ஜாகீர்மங்கலம் --- பழையனூர் வரையிலான இரண்டு கி.மீ., தூர தார்ச்சாலை, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த தார்ச்சாலை மூன்று ஆண்டுகளாக சேதமடைந்து, குண்டும் குழியுமான சாலையாக மாறியுள்ளது.மேலும், தார் பெயர்ந்து மண் சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிவாசிகள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர்.இப்பகுதியில் உள்ள தார் சாலை, குண்டும் குழியுமாக மாறி ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இதனால், அவ்வப்போது வாகன ஓட்டிகள் தாமாக விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ