உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில் குளத்தில் பாசிகள் வழுக்கி விழும் பக்தர்கள்

கோவில் குளத்தில் பாசிகள் வழுக்கி விழும் பக்தர்கள்

திருவாலங்காடு, திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.இக்கோவில் திருக்குளம் பத்ரகாளியம்மன் சன்னதி எதிரே, 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.திருக்குளத்தில் நீராடினால் கங்கையில் நீராடியதற்கு சமம் என்பது ஐதீகம். எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீராடியும், முடியாதவர்கள் தண்ணீரை தெளித்து கொண்டு செல்வர்.சில மாதங்களாக திருக்குளத்தின் படிகளில் பாசி படிந்துள்ளது. இதை அறியாமல் குளத்திற்குள் நீராடவும், தண்ணீர் தெளித்து செல்ல இறங்கும் பக்தர்கள் படிகளில் படிந்துள்ள பாசிகளால் வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.கோவிலுக்கு நிம்மதி தேடி வரும் பக்தர்கள், பாசி படிந்த குளத்தின் படிகளில் வழுக்கி விழுந்து காயமடைவதால், மனம் நொந்து புலம்பி செல்கின்றனர்.எனவே, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம், குளத்தின் படிகளில் படிந்துள்ள பாசிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி