உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பண தகராறில் ஓட்டுநர் கடத்தல் டிராவல்ஸ் உரிமையாளர் கைது

பண தகராறில் ஓட்டுநர் கடத்தல் டிராவல்ஸ் உரிமையாளர் கைது

மதுரவாயல், பணத்தகராறில் ஓட்டுநரை கடத்தி சென்று தாக்கிய, டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். திருச்சியை சேர்ந்தவர் கோபி, 37. இவர், சென்னை சூளைமேடில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணி செய்து வந்தார். அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து, 31,000 ரூபாய் முன்பனமாக பெற்ற கோபி, பணத்தை திருப்பி கொடுக்காமல் வேலையை விட்டு நின்றார்.இதனால் ஆத்திரமடைந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் விஜய், ஏமாற்றி சென்ற கோபியை தேடிவந்தார். கடந்த 28 ம் தேதி, வானகரம் மீன் மார்க்கெட் அருகே நின்ற கோபியை, தன் இரு சக்கர வாகனத்தில் விஜய் கடத்தி சென்றார்.சூளைமேடில் உள்ள ஒரு வீட்டில் கோபியை அடைத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தன்னுடன் பணியாற்றும் நண்பர் திவாகரையும், 24 வர வைத்து, இருவரும் சேர்ந்த்து கோபியை தாக்கியுள்ளனர். அங்கிருந் தப்பி வந்த கோபி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் விஜய், 27, பூந்தமல்லியை சேர்ந்த திவாகர், 24 ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை