மேலும் செய்திகள்
31ல் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
25-Jan-2025
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி, நடக்கிறது.இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம்; கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய் மற்றும் அனைத்து வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தவறாமல் பங்கேற்று, பயன் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
25-Jan-2025