உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி பழங்கால கோவில்களில் உழவாரப்பணிகளுக்கு அழைப்பு

கும்மிடி பழங்கால கோவில்களில் உழவாரப்பணிகளுக்கு அழைப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாலீஸ்வரர், சந்திரசேகரர், சென்ன கேசவ பெருமாள் கோவில்கள் உள்ளன.சென்னை, அம்பத்துார் பகுதியை சேர்ந்த, ஹிந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில் மேற்கொண்ட கோவில்களில் இன்று, உழவாரப்பணிகள் மேற்கொள்ள இருக்கின்றனர்.அதை முன்னிட்டு, இன்று காலை, பழங்கால கோவில்களை சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உழவாரப்பணிகளில் மக்களும் பங்கேற்க, அழைப்பு விடுக்கும் விதமாக புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் வீதி உலா செல்ல இருக்கின்றனர்.தொடர்ந்து காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை உழவாரப்பணிகள் மேற்கொள்ள இருக்கின்றனர். ஆர்வம் உள்ளவர்கள் விபரம் அறிய, 98401 23866 என்ற மொபைல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை