உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டாக்டர் வீட்டில் நகை திருடிய வேலைக்காரி கைது

டாக்டர் வீட்டில் நகை திருடிய வேலைக்காரி கைது

திருவள்ளூர்:திருவள்ளூர், ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் எழிழன் மனைவி அம்சவள்ளி,46. இவர் சித்த மருத்துவ துறையில் 'பிசியோதெரபிஸ்ட்' ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில், பெரியகுப்பத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணன் மனைவி சத்யபாமா, 36 வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த, 23ல் அம்சவள்ளி குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.அப்போது, வீட்டின் படுக்கை அறை பீரோவில் வைத்திருந்த ஐந்தரை சவரன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து, அம்சவள்ளி நேற்று முன்தினம் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, சந்தேகத்தின் அடிப்படையில், வீட்டில் வேலை பார்த்த சத்யபாமாவை விசாரித்தனர். இதில், அவர் தான் நகையை திருடியது என தெரிந்தது. இதையடுத்து, போலீசார் சத்யபாமாவை கைது செய்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ