உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயன்பாடு இல்லாத ஆடு அடிக்கும் தொட்டி

பயன்பாடு இல்லாத ஆடு அடிக்கும் தொட்டி

திருவள்ளூர்: திருமழிசை -- ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள சுடுகாடு அருகே, 2012ம் ஆண்டு 20 லட்சம் ரூபாய் செலவில், நவீன ஆட்டிறைச்சி கூடம் எனும் ஆடு அடிக்கும் தொட்டி கட்டப்பட்டது.கட்டி முடிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும், நவீன இயந்திரங்கள் இல்லாமல் பயன்பாட்டிற்கு வராததால், புதர் மண்டி வீணாகி வந்தது.இதையடுத்து, ஆடு அடிக்கும் தொட்டி, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் வகையில், பேரூராட்சியின் 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், சீரமைக்கப்பட்டு இரு ஆண்டுகளாகியும், இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால், மக்கள் வரிப்பணம் 37 லட்சம் ரூபாய் வீணாகி வருவதாக திருமழிசை பகுதிவாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆடு அடிக்கும் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, திருமழிசை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !