உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோளிங்கரில் பவித்ர உற்சவம்

சோளிங்கரில் பவித்ர உற்சவம்

சோளிங்கர், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். யோக நரசிம்மரின் உற்சவமூர்த்தியான பக்தோசிதபெருமாள், சோளிங்கர் நகரில் அருள்பாலித்து வருகிறார். பக்தோசித பெருமாள் கோவிலின் பவித்ர உற்சவம் வரும் 2ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, ஊர்க்கோவிலில் இருந்து பக்தோசித பெருமாள், மலைக்கோவிலுக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து 8 ம் தேதி வரை நடைபெறும் உற்சவத்தில், பெருமாளுக்கு தினசரி திவ்ய பிரபந்த வேத இதிகாச பூரணாதி நடக்கிறது. இன்று காலை பக்தோசித பெருமாள் கோவிலில் கண்ணன், சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். மாலையில் உறியடி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ