மேலும் செய்திகள்
தனியார் பஸ் மோதி இருவர் பலி
12-Mar-2025
பூந்தமல்லி:கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த், 30. இவர், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் தங்கி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பர் பாலகணேஷ், 35, என்பவருடன் பைக்கில் சென்றார்.சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கம் சாலையில் திரும்பியபோது, அந்த வழியே வேகமாக வந்த லாரி மோதியது.இதில், பலத்த காயமடைந்த பிரசாந்த், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார். பாலகணேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் விநாயகம், 39, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
12-Mar-2025