உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.1.76 கோடி மதிப்பில் நலதிட்ட உதவி வழங்கல்

ரூ.1.76 கோடி மதிப்பில் நலதிட்ட உதவி வழங்கல்

திருவள்ளூர்:பூண்டி ஊராட்சி ஒன்றியம் சதுரங்கபேட்டையில், தொல்குடியினர் வேளாண் மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் கயல்விழி தலைமை வகித்து, 290 பயனாளிகளுக்கு 1.76 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில், பல்வேறு நல உதவி வழங்கப்படுகிறது. திருப்பேர், பட்டரைபெரும்புதுார், பூண்டி, எல்லப்பநாயுடுபேட்டை, பழவேற்காடு, கோட்டைக்குப்பம் ஆகிய ஆறு ஊராட்சிகளைச் சேர்ந்த, 290 பழங்குடியின பயனாளிகளுக்கு நல திட்ட உதவி வழங்கப்பட்டு உள்ளது.தேசிய மீன்வள மரபணு பேனகம் வாயிலாக, கோட்டைக்குப்பம், செஞ்சியம்மன் நகரில் 100 பழங்குடியின குடும்பங்களுக்கு வண்ண மீன் வளர்ப்பு, தொழில் நுட்பத்துடன் கூடிய நண்டு வளர்ப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் மீன் வளர்ப்பு பண்ணை ஏற்படுத்தி பயிற்சி வழங்க 87.61 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா, திருவள்ளூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ