உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

திருத்தணி கோவில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் 29 உபகோவில்களில், உள்துறை மற்றும் வெளித்துறை என, இரு பிரிவுகளில், மொத்தம் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், உள்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை, வெளித்துறைக்கு பணியிடம் மாற்றி பதவி உயர்வு வழங்காமல், ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தின் திருத்தணி கிளை சார்பில், நேற்று முருகன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணியிடம், சங்க தலைவர் குப்பன் மனு அளித்தார்.கடந்த 2005ம் ஆண்டு முருகன் கோவிலில் உள்துறையில் பணிபுரிந்த மூன்று ஊழியர்களுக்கு, வெளித்துறை பணியிடம் மாற்றி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதேபோல், தற்போது உள்துறையில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள், இரவு காவலர்கள் மற்றும் துப்புரவாளர்கள் ஆகியோர், 20 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவில்லை.எனவே, வெளித்துறை பணியிடத்திற்கு மாற்றம் செய்து பதவி உயர்வு அளிக்க வேண்டும் என, சங்க தலைவர் மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் இணை ஆணையர், 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை