உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவங்கியது

திருவள்ளூரில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவங்கியது

திருவள்ளூர்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி திருவள்ளுர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். பின் அவர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று துவங்கி, வரும் 24 வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடக்கிறது. தடகளம், நீச்சல், மேசைப்பந்து மற்றும் கேரம், இறகுப் பந்து, கிரிக்கெட், சிலம்பம், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கபடி, கோகோ, செஸ், வளைகோல்பந்து, கைப்பந்து, உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு முறையே, 3,000, 2,000, 1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். தனிநபர் பிரிகளில் முதல்பரிசு பெற்றவர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன்-திருவள்ளூர், சந்திரன்-திருத்தணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராமன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை