உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரியில் இன்று திருக்கல்யாணம்

சிறுவாபுரியில் இன்று திருக்கல்யாணம்

ஆரணி: சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று, திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில், பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருமண தடை நீக்கும் திருத்தலம் என்ற சிறப்பு பெயர் உண்டு. அங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது.சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவின், 12ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சிறுவாபுரியில் இன்று காலை 9:00 மணியளவில் வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், வழிபாட்டுக் குழுவினரும் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !